ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்! வெளிப்படுத்திய உதய கம்மன்பில
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி வேறு ஒருவர் என காண்பிக்க சிலர் முயற்சித்தாலும் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீம் என்பது நிரூபணமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளை தர்க்க ரீதியாக பார்க்கும் போது சஹ்ரான் ஹாசீம் இந்த குற்றச்செயலை மேற்கொண்மை தெளிவாக புலனாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
இந்த தகவல்களை தாம் சாட்சிகளுடன் வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார் .
இந்த தாக்குதலில் சஹ்ரான் ஹாசீம் உள்ளிட்ட ஒன்பது பேரு கொல்லப்பட்டனர் என்ற போதிலும் அவரது மனைவி பாத்திமா ஹாதியா, உயிருடன் இருக்கின்றார் அவரது இரண்டாவது தலைவராக கருதப்பட்ட முகமது நவம்பர் உயிருடன் இருக்கின்றார்.

அவரது ஆயுதப் படைப்பிரிவு பொறுப்பாளர் மில்கான் உயிருடன் இருக்கின்றார் இவர்கள் வழங்கிய தகவல்களில் இந்த பிரதான சூத்திரதாரி பற்றி விவரங்கள் காணப்படுவதாகவும், தாம் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆதாரங்களை சுட்டிக்காட்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளர்ர்.
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் திகதி கோபத்துடன் காணப்பட்ட சஹரான் தனது சகாக்களை அழைத்து கிறிஸ்தவர்களை கொல்லப் போவதாக கூறியுள்ளார், தான் தற்கொலை செய்து கொள்ள தயார் எனவும் வேறு யார் இணைந்து கொள்வது என சகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதன் அடிப்படையிலேயே இந்த ஈஸ்டர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது எனவும் குண்டு தாரிகளாக செயற்பட்டவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள், குண்டுகள் எவ்வாறு தயாரிக்கப்பட்டது, தாக்குதலுக்கான இடங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நூலில் குண்டு வெடிக்கின்றது என்ற அத்தியாயத்தில் இது பற்றிய விவரங்களை நான் குறிப்பிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
வெடிபொருட்களை திரட்டியது சஹ்ரான், குண்டு தாரிகளை தெரிவு செய்தது சஹ்ரான், தாக்குதல் நடத்தக்கூடிய இடங்களை தெரிவு செய்ததும் சஹரானே அதற்கு தேவையான உட் கட்டுமான வசதிகள் மற்றும் நிதி வசதிகளை சஹ்ரானே பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு சுமார் 300 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது இதற்கான முழு நிதியீட்டத்தையும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஹம்மத் இப்ராஹிம் வழங்கியிருந்தார் எனவும் தாம் ஆதாரங்களுடனே இதனை குறிப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தாம் வெளிப்படுத்தும் தகவல்கள் அமெரிக்க நீதிமன்றில் சாட்சியமாக காணப்படுகின்றது, இந்த தாக்குதல் ஐஎஸ் தீவிரவாதிகளின் தேவைக்காக சஹ்ரான் முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஸஹரன் ஹாஸிம் தவிர்த்த வேறு யாராக இருக்க முடியும் என உதய கம்மன்பில கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த தாக்குதலை வேறு நபர்கள் மேற்கொண்டதாக விசாரணைகளை திசை திருப்ப முயற்சிக்கப் பட்டாலும் தர்க்க ரீதியாக இந்த தாக்குதல் சஹ்ரான் ஹசிமினால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு போதிய அளவு சாட்சியங்கள் உண்டு என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri