நாட்டை கட்டி எழுப்பும் மூளை யாரிடம்? வெளியான தகவல்: செய்திகளின் தொகுப்பு
நாட்டில் கடுமையான தொற்றுநோய் பரவியுள்ள போதிலும், சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டைக் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்கம் 6 பில்லியனால் குறைத்துள்ளது. மக்களின் சுகாதாரம் மற்றும் பசியின்மை தொடர்பில் அக்கறை கொள்ளாத அரசாங்கம் ஏன் இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardena) கேள்வி எழுப்பியுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இது மக்களைத் தவறாக வழிநடத்தும் வரவு செலவுத் திட்டம் எனவும், நாட்டு மக்களுக்கு அரிசி, சீனி உட்பட உண்பதற்கு எதுவுமில்லை எனவும், இவ்வாறான நாட்டில் அரசாங்கம் பொய்யான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தமிழ்வின் காலை நேர செய்திகளின் தொகுப்பு,