இலங்கையின் தலையெழுத்தை யாரால் மாற்றமுடியும்...?

srilanka
By Independent Writer Mar 02, 2021 04:40 PM GMT
Independent Writer

Independent Writer

in இலங்கை
Report

நாயின் வேலையை நாய் பார்க்க வேண்டும். கழுதையின் வேலையைக் கழுதை பார்க்க வேண்டும்' - என்பார்கள்.

மாறிக் காரியம் ஆற்ற முயன்றால் - நாயின் வேலையைக் கழுதையோ, கழுதையின் வேலையை நாயோ பாரக்க முயற்சித்தால் - சிக்கல்தான்.

இது வீட்டு வேலைகளுக்கு மட்டுமல்ல, நாட்டு வேலைகளுக்கும் பொருந்தும்.

சிவில் நிர்வாகிகள், இராஜதந்திரிகள் பணிபுரிய வேண்டிய உயர் பதவிகளில் எல்லாம் படை அதிகாரிகளைக் கொண்டு வந்து நியமித்திருக்கின்றார் நாட்டின் ஜனாத்பதி கோட்டாபய ராஜபக்ஷ.

இராணுவ அதிகாரியை நாட்டின் ஜனாதிபதியாக்கியதன் விளைவை நாடும் மக்களும் சந்தித்துத்தானேயாக வேண்டும்?

அதுபோல, சிவில் அதிகாரிகள், இராஜதந்திரிகள் பதவிக்கு முன்னாள் படை அதிகாரிகளை நியமித்ததன் விளைவையும் நாடு எதிர்கொண்டுதானாக வேண்டும்!

காவல்கார நாயின் குரைக்கும் வேலையை கழுதை பொறுப்பெடுத்து, கழுதை "காள்' "காள்' என்று கர்ண கொடூரமாய்க் கத்திக் காதைப் பிளந்தால் யார்தான் தாங்குவர்? பொறுக்க முடியாமல் அடித்துத் தானே துரத்துவர்...!

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவி என்பது முக்கிய இராஜதந்திர பொறுப்பு. சாணக்கிய தந்திரம் தேவைப்படுவது. அதற்குத் தேவையானது யுத்தத்தில் பயன்படுத்தும் வீர தந்திரோபாயம் அல்ல.

படைக் கையாள்கை வேறு; வெளிவிவகார இராஜதந்திரம் வேறு. ஜெனிவா நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவ நாடுகளின் ஆதரவை ஆதங்கத்தோடு வேண்டி நிற்கின்றது. தேடியலைகின்றது.

அதுவும் அயலில் உள்ள தேசங்களின் - குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளின் - ஆதரவும் ஒத்துழைப்பும் இலங்கைக்கு மிக மிக அவசியமாகும்.

"அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்த' கதையாக இந்தியாவின் ஆதரவைக் கோரும் வகையில் இந்தியாவின் முக்கிய நாளிதழான "த ஹிந்து' பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளரான முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே இறுதியில் தேவையில்லாமல் இந்தியாவைச் சீண்டும் வேலையைப் பார்த்திருக்கின்றார்.

கடைசியாகக் குளிக்கப் போய், சேறு பூசிய கதையாக அவரின் முயற்சி முடிந்திருக்கின்றது.

இந்த இக்கட்டுச் சமயத்தில், இந்தியாவுடன் சேர்ந்து, ஓடி, சாணக்கியமாகக் காய்களை நகர்த்தி, விடயத்தை வெல்வதை விடுத்து, வெளிவிவகார இராஜதந்திரம் என்பது பீரங்கி வைத்து முழங்கி எதிர்த்தரப்பை பணிய வைப்பது என்ற பாணியில் அவர் செயற்பட்டிருக்கின்றார்.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான விவகாரத்தில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி தங்கள் நிலைப்பாட்டை ஓரிரு வாசகங்களில் குறிப்பிடக் கூடியதாக தெட்டத் தெளிவாக எடுத்துரைத்து விட்டார்.

இலங்கையில் தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை - 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டவை உள்ளடங்கலான அதிகாரப் பரவலாக்கலை - கொழும்பு ஆட்சிப் பீடம் வழங்க வேண்டும். அந்த அடிப்படையில் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமையை இந்தியா ஆதரித்து உறுதிப்படுத்தும்.

இதுவே தனது நிலைப்பாடு என்பதை இந்தியா ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ற சர்வதேச அரங்கில் வைத்து அறிவித்த பின்னரும், இந்திய இராஜதந்திரத்தை வேறுவிதமாகச் சீண்டுகின்றார் இலங்கை வெளிவிவகாரச் செயலாளர்.

1987 இல் செய்து கொள்ளப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய, அந்த இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே செயற்பட்டது அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம்.

அதை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகின்றது இந்தியா. இலங்கையுடனான உறவு - ஊடாட்டம் - இரண்டு தூண்களில் தங்கியுள்ளதாக் கூறும் புதுடில்லி, அதில் ஒன்று 13ஆவது திருத்தம் உள்ளடங்கலாக அதிகாரப் பகிர்வை முழு அளவில் வழங்குவதன் மூலம் தமிழர்களின் நீதி, நியாயமான அபிலாஷைகளை நிறைவு செய்வது என்று சுட்டியுள்ளது.

அந்தக் கடப்பாட்டை நிறைவு செய்தால்தான் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமையை மதித்தல் என்ற மற்றைய தூண் பலமாக நிற்கும் என்ற புதுடில்லியின் கருத்துரையை நிராகரிக்கும் விதத்தில் கருத்து வெளியிடுகின்றார் கொலம்பகே.

"1987இன் செயற்பாடு முறைமைகள் மாறிவிட்டன. காலம் ஓடிவிட்டது; நிலைமைகள் மாறிவிட்டன. அந்தக் கால ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தும்படி இந்தியா சதா அரித்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழர் தரப்பு சமஷ்டி என்கிறது. அதன் கீழ் காணி, பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்கின்றார்கள். அப்படிக் கேட்டால் அது என்ன? தனி நாடுதானே?'' - என்று இராஜதந்திரமே தெரியாமல் வாயைப் பிளக்கின்றார் ஜெயநாத் கொலம்பகே.

நாயின் வேலையைக் கழுதை பார்த்தால் இப்படித்தான் இராஜதந்திரமற்ற வார்த்தைகள் கொட்டும். இது இலங்கையின் தலைஎழுத்து...!

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US