பிரான்சில் ஈழத் தமிழ் குடும்பத்தின் முன்மாதிரி செயல்..!
பிரான்ஸ் நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்குத் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து, சூரன் என்ற 28 வயதுடைய இளைஞன் கடந்த (22)ஆம் திகதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த இளைஞன், இலங்கையின் மகத்துவத்தையும், யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
தங்களது பிள்ளைகள் ஏதாவதொன்று முயற்சிக்கும் போது பெற்றோர்கள் தான் 100 சதவீத பங்களிப்பை வழங்க வேண்டும் என்று குறித்த இளைஞனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். மேலும் தெரிவித்த அவர்கள், குறித்த இளைஞன் இந்தவிடயத்தை 2 வருடங்களுக்கு முன்னரே தங்களுக்கு தெரிவித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சொந்த மண்ணுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளனர். இனி அவர் எடுக்க போகும் எல்லா முயற்சிகளுக்கும் தாங்கள் துணை நிற்கபோகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        