முல்லைத்தீவில் வெண் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கை ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுகுடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை கிராமத்தில் தென்னம்பிள்ளைகளைத் தாக்கும் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மருந்து தெளிக்கும் நடவடிக்கை இன்று (21.07.2026) உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நடவடிக்கையை வடக்கு மாகாண தென்னைப் பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளரும், வடக்கு மாகாண தென்னை முக்கோண வலய திட்டமிடல் பணிப்பாளருமான தேவராஜா வைகுந்தன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
கட்டுவான தீ விபத்தில் 5 பேர் பலி..! காணாமல்போயுள்ள பலர் - பல மணி நேரமாக தீயை கட்டுப்படுத்த கடும் பிரயத்தனம்
வெண் ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெண் ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் முதலாவது ஆரம்ப நடவடிக்கையாக இது அமைந்துள்ளது.

தென்னைப் பயிர்களைப் பாதுகாத்து, விவசாயிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நோக்கில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், தென்னைப் பயிர்ச்செய்கை சபை பணியாளர்கள், கற்பக சங்க உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தென்னைப் பயிர்ச்செய்கையில் வெண் ஈக்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இந்நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடூர தாக்குதலின் பின்னணியில் முக்கிய சூத்திரதாரியான ராஜபக்ச குடும்பத்தினர்..! அம்பலமாகும் சதித்திட்டம்








