2009 - வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிக்கப் போகும் இராணுவத்தினர்
இறுதிக்கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர், வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய முயற்சித்த போது இராணுவ படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என சரத் பொன்சேகா சர்வதேசத்திடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
வெள்ளைக் கொடிகளை ஏந்திய விடுதலைப் புலிப் போராளிகள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டதாக சரத் பொன்சேகா கூறினார் என பத்திரிகை ஒன்று செய்தியும் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சரத் பொன்சேகா கூறியதாக தெரிவிக்கப்படும் வெள்ளைக்கொடி விவகாரம் நாடளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சரத் பொன்சேகாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.
இந்த விடயத்தை தற்போது சர்வதேசத்திடம் கூறியதால் மீண்டும் உள்நாட்டு போர் தொடர்பான பிரச்சினைகள் எழும் என சரத் பொன்சேகாவின் கருத்துக்கு பல விமர்சனங்கள் எழுப்பப்பட்டன.
அது மாத்திரமன்றி, பொன்சேகா வெளியிட்டதாக கூறப்படும் இந்த யுத்த காலத்தின் இறுதி பகுதியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் வீரியமடைந்துள்ளன எனலாம்.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் தீர்த்தத் திருவிழா




