கோட்டாபய அரசாங்கத்திடம் சாட்டையடி கேள்வி! இருள் சூழ்ந்துவரும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை(Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறையினால் வெளிநாடுகளிலிருந்து அரசி இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த அரிசி யூரியா இல்லாத இயற்கை உரத்தை உற்பத்தி செய்யப்பட்டனவா என விவசாயி ஒருவர் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யூரியா உர பற்றாக்குறையினால் எமது வயல் நிலங்கள் விளைச்சலின்றி காடுபோல் காட்சியளிக்கின்றன. யூரியா உரம் இருக்கின்ற காலத்திலே இந்த வயல் நிலங்களின் சொந்தக்காரர்கள் தங்களது அரிசி தேவையை இந்த வயல்களினூடாக பெற்று வந்துள்ளார்கள்.
அரசாங்கம் இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு எங்களுக்குக் கூறுகிறது. ஆனால் யூரியா உரம் பாவித்துப் பயிர்செய்கையை மேற்கொண்டு வந்த வயல் நிலங்களை இயற்கை உரத்துக்கு திடீரென்று மாற்றமுடியாத நிலை காணப்படுகிறது.
நாங்கள் அதனை திடீரென்று மாற்றியதன் பலனாகவே எங்களுக்கு இந்தமுறை விளைச்சல் படுமோசமாக இருக்கிறது. யூரியா போன்ற செயற்கை உர பாவனையால் மக்களுக்கு நோய் நொடிகள் ஏற்படுவதாகவும், இயற்கை உரத்தைப் பாவித்து பயிர்செய்கையை மேற்கொண்டால் நோய் நொடிகள் ஏற்படாது எனவும் அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் தற்பொழுது வெளிநாடுகளிலிருந்து அரிசி பற்றாக்குறைக்காக அரிசியை இறக்குமதி செய்கிறார்கள் அந்த அரிசி யூரியா இல்லாத இயற்கை உரத்தால் செய்யப்பட்டனவா என்ற கேள்வி எமக்குள் எழுகிறது.
எந்த அரசாங்கம் மக்களைப் படு மோசமான ஒரு நிலைமையைச் சந்திக்க வைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.





புலம்பெயர்ந்தோர் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள்... உள்துறைச் செயலருக்கு 105 தொண்டு நிறுவனங்கள் கடிதம் News Lankasri
