ஊரடங்கு நீடிக்கப்படுகின்றதா? சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதற்கு அரசாங்கம் இதுவரை தீர்மானிக்கவில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கோவிட் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த 20ம் திகதி இரவு 10 மணி முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் 10 நாட்கள் நாட்டை முடக்குமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் முன்னாள் பிரதானி விசேட வைத்தியர் டொக்டர் நிஹால் அபேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை போதுமானது அல்லவெனவும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றமை அத்தியாவசியமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், 30ம் திகதிக்கு பின்னர் நாடு தொடர்ந்தும் முடக்கப்படுமா? என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், இதுவரை அவ்வாறான தீர்மானம் எதனையும் எட்டவில்லை என தெரிவித்துள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri