சீன நிறுவனத்திற்கு பணம் வழங்குவதா இல்லையா? நீதிமன்றின் தீர்மானம் (Video)
சீனாவின் சேதன பசளைகள் நிறுவனத்துக்கு கொடுப்பனவை செலுத்துவதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை நீடிப்பதா? அல்லது நீக்குவதா, என்பது குறித்து எதிர்வரும் ஜனவரி 6ம் திகதி தீர்மானிக்கப்படும் என்று கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இந்த அறிவிப்பை விடுத்தது. சீனாவிடம் இருந்து சேதன பசளைகளை இறக்குமதி செய்வதற்கான முனைப்பின்போது, சீனாவின் நிறுவனத்துக்கு கொடுப்பனவை செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டது.
இதனையடுத்து சீன நிறுவனத்தின் கப்பல், சேதன பசளைகளுடன் இலங்கைக்கு வந்தது. இதற்கிடையில் மேற்கொள்ளப்பட்ட தர நிர்ணய சோதனையின்போது சீனாவின் சேதன பசளையில் பக்றீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.
இந்தநிலையில், சேதன பசளைகளை ஏற்றிவந்த கப்பலில் உள்ள சேதன பசளைகளை இறக்கவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் வழங்கப்பட்ட கட்டளையின்படி சேதனப் பசளைகளை இலங்கைக்கு இறக்கவேண்டும் என்றும் இல்லையேல் கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளமையால் குறித்த பசளைக்குரிய கொடுப்பனவை செலுத்தவேண்டும் என்றும் சீனாவின் நிறுவனம் வலியுறுததியிருந்தது.
இதற்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் கொழும்பு வணிக மேல்நீதிமன்றம், சீன நிறுவனத்துக்கான கொடுப்பனவை நிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவை விதித்தது.
இதனையடுத்து கடன் கடிதத்தின் அடிப்படையில் தமது நாட்டு நிறுவனத்துக்கான கொடுப்பனவை செலுத்தாமை காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை இலங்கையில் உள்ள சீனத் துாதரகம், கறுப்பு பட்டியலில் சேர்த்தது.
இதன் காரணமாக இலங்கையில் உள்ள வணிக வங்கிகளின் கடன் கடிதங்களை, இலங்கைக்கான ஏற்றுமதி நிறுவனங்கள் புறக்கணித்தன. இதனால் இலங்கையின் இறக்குமதியாளர்கள், கடன் கடிதங்களை வெளிநாட்டு வங்கிகளிலும் பெறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
எனினும் கடந்த வாரம், ராஜதந்திர உறவுகளின் அடிப்படையில் சீன நிறுவனத்துக்கான கொடுப்பனவான 6.7மில்லியன் டொலர்களை செலுத்துவது என்றும் பக்றீரியா தொற்று இருப்பதாக கூறப்படும் பசளைகளை மீண்டும் சீனாவுக்கு எடுத்துச்சென்று தொற்று நீக்கிய பின்னர் அதனை இலங்கைக்கு எடுத்துவருமாறும் இலங்கை அரசாங்கம், அறிவித்தது.
இதற்கு மத்தியிலேயே இந்த கொடுப்பனவு தொடர்பான இடைக்கால தடையை நீடிப்பதா? அல்லது நீக்குவதா? என்பது குறித்து எதிர்வரும் 6ம் திகதி தீர்மானிக்கப்படும் என்று கொழும்பு வணிக மேல்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை பக்றீரியா தொற்று இருந்ததாக கூறப்பட்ட தமது 20 ஆயிரம் தொன் சேதன பசளைகளை சிங்கப்பூரில் சோதனையிட்டபோது, அதில் பக்றீயாக்கள் இல்லை என்று முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சேதனப் பசளைகள் நிறுவனம் இனறு அறிவித்துள்ளது.

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
