வங்குரோத்து அடைந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்
தேசிய மக்கள் சக்தி அரசு பொறுப்பேற்ற நேரத்தில் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக இருந்ததாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள் அந்த நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டு இலங்கை அதிகாரப்பூர்வமாக வங்குரோத்து நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வங்குரோத்து நிலைமையிலிருந்து இலங்கை அதிகாரப்பூர்வமாக வெளியேறியது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான ஆட்சியில் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற நேரத்தில், பல வகையான பொருட்களின் இறக்குமதிகள் தடைசெய்யப்பட்டிருந்தன.
ஆனால் தற்போதைய அரசு அதிகாரத்திற்கு வந்த பின்னர், அந்தக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கி, பொருட்கள் இறக்குமதியை ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், வங்கித் துறையின் ஊடாக கடன் கடிதங்கள் (LC) திறப்பதும் தற்போது வழக்கமான முறையில் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் தற்போது நிலையான பாதையில் முன்னேறி வருவதாகவும், வங்குரோத்து நிலையிலிருந்து அதிகாரப்பூர்வமாக விடுபட்ட ஒரு நாடாக, எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri