வவுனியாவில் இரு வேறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படும் கோதுமை மா
வவுனியா மாவட்டத்தில் 100 ரூபாய் மற்றும் 115 ரூபாய் என இரு வேறுபட்ட விலைகளில் கோதுமை மா விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இரு விலைக்கு விற்பனை செய்யப்படும் கோதுமை மா பையில் ஒரே பொதியிடல் இலக்கம் காணப்படுகின்ற ஒரு மா பையில் 100 ரூபாய் எனவும் மற்றைய மா பையில் 100 ரூபாய் என்பதினை அழித்து 115 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது.
வவுனியா, பஜார் வீதியிலிருந்து வியாபார நிலையங்களுக்கு கோதுமை மா விநியோகம் செய்யும் குறித்த நிறுவனத்தினாலேயே இவ்வாறான விலை மாற்றம் செய்து சிறிய வர்த்தக நிலையங்களுக்கு விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது.
மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு பொது மக்களால் தெரியப்படுத்தியுள்ள போதும், இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.





வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
