வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பியவர் விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் சட்டவிரோதமாக கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (06) காலை 05.20 மணிக்கு ஃபிட்ஸ் ஏர் விமானம் 8D. - 822 இல் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 48 வயதான சந்தேகநபர் டுபாயில் மூன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேகநபர் கொண்டுவந்த பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 1.35 மில்லியன் ரூபா மதிப்புடைய 9,000 "பிளாட்டினம்" சிகரெட்டுகள் அடங்கிய 45 கார்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேகநபரை எதிர்வரும் 08 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மேலதிக விசாரணைக்காக முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வாட்டர் மெலன் திவாகர் முதல் அகோரி கலையரசன் வரை.. பிக் பாஸ் 9ல் நுழைத்த 20 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ Cineulagam

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
