கோதுமை மாவின் விலை உயர்வு! பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
ப்ரிமா கோதுமை மாவை கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.
ப்ரிமா மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமையை தவிர்ப்பதற்காக இந்த செயல்பாட்டை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே கேட்டுள்ளார்.
ப்ரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை திடீரென உயர்த்தியமை.சட்டவிரோதமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலையுயர்வுக்கு, 2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார ஆணையத்தின் முன் அனுமதி பெற வேண்டும்.
எனினும் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க ப்ரிமா நிறுவனத்திற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை, அவர் கூறியுள்ளார்.
இதேவேளை 1 கிலோ கோதுமை மாவின் அதிகபட்ச சில்லறை விலை 87ரூபாவாகும் என விதானகே நினைவூட்டினார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan
