கோதுமை மாவின் விலை 3.50 ரூபாவால் அதிகரிப்பு
பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 3 ரூபாய் 50 காசுகளால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தமது முகவர்களுக்கு அறிவித்துள்ளது.
பிரிமா நிறுவனத்தின் 50 கிலோ கிராம் எடை கொண்ட மில்க் பிரேன்ட் கோதுமை மா பொதி 4 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
புதிய விலையேற்றத்தின்படி இன்று முதல் அதன் விலை 4 ஆயிரத்து 175 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரிமா நிறுவனம் ரொட்டிக்காக பயன்படுத்தும் கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின் விலைகளை அண்மையில் 4 ரூபாவால அதிகரித்தது.
இந்த நிலையில் பாண் உட்பட வெதுப்பக உணவு உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், அந்த உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என வெதுப்பக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam