கோதுமை மாவின் விலை மீண்டும் உயர்வு! பாணின் விலையும் உயர்கிறது
கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு வரி காரணமாக இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மாவின் விலையை அதிகரித்துள்ளன.
இதன்படி, 13 ரூபாவினால் கோதுமை மாவின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
பாணின் விலை அதிகரிப்பு

இதனால் எதிர்காலத்தில் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்திருந்தார்.
அத்துடன், கோதுமை மா இறக்குமதியாளர்களிடம் டொலர்கள் இல்லாமை காரணமாகவே கோதுமை மா விலை அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கோதுமையுடன் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாகவும், அவற்றை விடுவித்தால் கோதுமை மாவின் விலை குறைவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
வெளியில் சாப்பிட நீ எதுக்கு இருக்க, மீனாவிடம் செந்தில் கேட்ட கேள்வி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam