வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு
வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைத்தொலைபேசிகளில் பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.
மெட்டாவுக்குச் சொந்தமான செய்தியிடல் சேவையானது இத்தகவலை வெளியிட்டுள்ளது.
தங்கள் கணக்கை ஒரே கைத்தொலைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டு பயனர்கள் தங்கள் கைத்தொலைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைத்தொலைபேசிகளில் இதன்மூலம் பயன்படுத்த முடியும்.
விரைவில் உபயோகிக்க முடியும்
தொடர்ச்சியாக பல ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் அவை அனைத்தும் ஒரே வாட்ஸ்அப் கணக்குடன் இணைக்கப்பட வேண்டும் என்று விரும்பும் எவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது,
இது எதிர்வரும் வாரங்களில் அனைத்து பயனர்களுக்கும் இதனை உபயோகப்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
