தனியுரிமையை மேம்படுத்தும் வாட்ஸ்அப் செயலியின் புதிய அம்சம்
வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப்(Privacy checkup) என்று அழைக்கப்படுகிறது.
இரண்டு புதிய அம்சங்களும் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு(Android) மற்றும் ஐஒஎஸ்(ios) இயங்குதளங்களில் வழங்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக முறைப்பாடு தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் (silence unknown calls) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல்(contact list) இருப்பவர்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள செய்யும்.
Practice privacy self-care ? With our new Privacy Checkup, you can easily customize privacy settings to fit your lifestyle and security preferences.
— WhatsApp (@WhatsApp) June 21, 2023
To run a Checkup, tap into Settings > Privacy > Privacy Checkup pic.twitter.com/XDPzaHOK8C
இதன் மூலம் பயனர் தெரியாத இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகளால் தொந்தரவு இருக்காது. எனினும், நோட்டிஃபிகேஷன்(notification) பகுதியில் அழைப்பு வந்ததற்கான தகவல் இடம்பெற்று இருக்கும்.
அந்த வகையில் புதிய அம்சம் அழைப்புகளை முழுமையாக தடுக்காது. மாறாக, அழைப்பு வந்த தகவலை வழங்கி, யாரோ அழைப்பை மேற்கொள்ள முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கும்.
புதிய அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
privacy check up
பெயருக்கு ஏற்றார்போல் புதிய வாட்ஸ்அப் பிரைவசி செக்கப் அம்சம் கொண்டு செயலியில் கிடைக்கும் தனியுரிமை வசதிகளை இயக்க வழி செய்கிறது.
வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள பிரைவசி செக்கப் அம்சத்தில் ஸ்டார்ட் செக்கப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்ததும், பிரைவசி செட்டிங்(Privacy setting) நிறைந்த மெனு திரையில் காணப்படும். மேலும் பல்வேறு வகையான தனியுரிமை வசதிகளை ஒரே பெயரின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாக புதிய பிரைவசி செக்கப் அம்சம் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |