புதியதொரு அம்சத்தை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் வாரம் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய அம்சம் வாட்ஸ்அப் தளத்தில் வெளிவந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் செயலியில் வீடியோகால்(Video call) பேசும் போது உங்கள் சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அம்சம் ஸ்கிரீன் ஷேர் (screen share) என அழைக்கப்படுகின்றது.
ஸ்கிரீன் ஷேர் (screen share) என்பது ஒரு திறன்பேசியிலுள்ள திரையை மற்றொரு நபருடன் பகிர்வதாகும். அதாவது ஒரு நபருடைய திரையில் என்ன தோன்றுகிறதோ அதை மற்றொரு நபர் அவதானிக்க முடியும்
குறிப்பாக இந்த புதிய அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வாட்ஸ்அப் பயனர்கள் வீடியோகால் பேசும் போது ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம்.
பின்பு ஷேர் செய்யத் துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது. மேலும் போன்களில் வியூவிங் மற்றும் ஷேரிங் அனுபவத்தைப் பெறுவதற்கு வீடியோ கால் பேசும் போது மொபைலை லேன்ட்-ஸ்கேப் மோடில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது என தெரிவிக்கப்படுகின்றது.