வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் வசதி
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது.
பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவது மட்டுமல்லாமல் சமீப நாட்களில் போட்டி நிறுவனங்களுக்கு சவால் அளித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் சேனல் என்ற அம்சத்தை வெளியிட்டுள்ளது. யூடியூப் போல் வாட்ஸ்அப் சேனல் அறிமுகப்படுத்தப்படுகிறது. விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம்.
நேரடியாக நிறுவனத்திற்கு செய்திகளை அனுப்ப முடியும். இருப்பினும் இந்த வாட்ஸ்அப் சேனல் அம்சம் தற்போது கொலம்பியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
விரைவில் அனைத்து நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என மெட்டா உறுதியளித்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் கொலம்பியாவில் உள்ள அனைத்து தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் வாட்ஸ்அப் சேனல்களை உருவாக்க முடியும்.
வாட்ஸ்அப் சேனல் என்றால் என்ன? எவ்வாறு பயன்படுத்துவது?
வாட்ஸ்அப்பில் உள்ள சேனல்கள் ஒரு வழி ஒளிபரப்பு கருவிகளாகும் (one-way broadcast tools). அங்கு அட்மின்கள் படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் வாக்கெடுப்புகளை நடத்தலாம். பயனர்கள் தங்களுக்கு விருப்பமான சேனல்களை சப்ஸ்கிரைப் செய்து அப்டேட்களைப் பெறலாம்.
சேனலுக்கான லிங்க் அல்லது அந்த குறிப்பிட்ட சேனலை வாட்ஸ்அப்பில் தேடி சப்ஸ்கிரைப் செய்யலாம்.
இதற்காக வாட்ஸ்அப்பில் “அப்டேட்ஸ்” என்ற புதிய மெனு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் வாட்ஸ்அப் குரூப் வசதி போல் சேனல் அட்மின் அனுமதி அளித்த பின் தான் சேனலில் இணைய முடியும். தனியுரிமை பாதுகாக்கும் வகையில் பயனர் மொபைல் எண்கள் யாருக்கும் காண்பிக்கப்படாது.
அதே போல் profile படமும் யாருக்கும் காண்பிக்கப்படாது. வாட்ஸ்அப் சேனலில் பதிவிடப்படும் செய்திகள்(படங்கள், வீடியோ) உள்பட அனைத்தும் 30 நாட்கள் மட்டுமே காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |