வாட்ஸ் அப் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கை
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களுக்கு அவசர எச்சரிக்கையொன்றினை விடுத்துள்ளது.
பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதாக வரும் தகவலை நம்பி றோஸ் நிற வாட்ஸ் அப்பை தொட்டீர்கள் என்றால்ஸ்மார்ட் போன் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கெனவே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வரும் பயனர்களுக்கு அண்மையில் குறுஞ்செய்தியொன்று அனுப்பப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு எச்சரிக்கை
குறித்த குறுஞ்செய்தியில் வரும் இணைப்பை (link) கிளிக் செய்தால் வாட்ஸ் அப் லோகோ றோஸ் நிறத்திற்கு மாறும் என்றும், அதை தொடர்ந்து வாட்ஸ் அப் பல்வேறு அப்டேட்களைப் பெறும் எனவும் அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனை நம்பி அந்த இணைப்பை (link) கிளிக் செய்தால் வரக்கூடிய விபரீதங்களை தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எனவே பிங்க் நிற வாட்ஸ்அப்பை தரவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும், இணைப்பை (link) கூட கிளிக் செய்ய வேண்டாமென்று வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |