உலகளாவிய ரீதியில் திடீரென முடங்கிய வாட்ஸ் - அப்! வைபர் கொடுத்த பதிலடி
இலங்கை, இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில் செயலிழந்திருந்த வாட்ஸ் - அப் செயலி ஒரு மணி நேரத்தின் பின்னர் மீண்டும் வழமைக்கு திரும்பியிருந்தது.
இந்நிலையில், வாட்ஸ் - அப் நிறுவனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைபர் "12 ஆண்டுகளுக்கு நிலையானது" என்று தமது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளது.
"தடங்கல் ஏற்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே இவ்வாறு வைபர் பதிவிட்டுள்ளது" என்று பயனாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
தொழினுட்ப பிரச்சினை
வாட்ஸ்-அப் செயலியின் மத்திய பரிமாற்ற கட்டமைப்பில் (server-side) ஏற்பட்ட தொழினுட்ப பிரச்சினையே இதற்கு காரணம் என மெட்டாவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த பாதிப்பை சரிசெய்து வாட்ஸ்-அப் மீளமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், முடிந்தவரை விரைவாக வாட்ஸ்-அப் ஐ மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டார்.