பணம் இருந்தால் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு? - அசாத் சாலி
பணம் இருந்தால் நான்கு பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார் என்பதற்காக குர்ஆனில் உள்ள சட்டங்களை மாற்றிக் கொள்ள முடியாது.
அவ்வாறு சட்டங்கள் மாற்றப்பட்டாலும் அதனை முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லிம் மக்களின் வாழ்க்கை முறைமையைச் சட்டங்களினால் மாற்றிவிட முடியாது.
முஸ்லிம் ஆண் ஒருவர் தனது பண வசதிக்கு ஏற்ற வகையில் பெண்களைத் திருமணம் செய்து கொள்கின்றார்.
அதில் எவ்வித தவறும் கிடையாது. செல்வம் இருக்கும் ஓர் ஆண் வசதி குறைந்த சில பெண்களைத் திருமணம் செய்து அவர்களைப் பராமரிப்பதில் தவறில்லை.
முஸ்லிம் சட்டங்களை மாற்றி தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம்.இனவாத அடிப்படையிலேயே இந்த சட்ட மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
