டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 400 தாண்டும் அபாயம் - பேராசிரியர் வெளியிட்ட தகவல்
நாட்டில் தற்போது வரையில் 300 ரூபாவை எட்டியுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையாது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
டொலரின் பெறுமதி 400 ரூபாவை எட்டும் என சிலர் கணித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் அடுத்த சில மாதங்களுக்கு டொலரின் பெறுமதி 300 ரூபாய் வரம்பிற்குள்ளேயே இருக்க வாய்ப்புள்ளதாக பேராசிரியர் பிரியங்க துனுசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி 203 ரூபாயில் வைத்திருந்த டொலர், சந்தை நிர்ணயித்த விலையை தீர்மானிக்க அனுமதித்த பின்னர் சுமார் 300 ரூபாவாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
