ரூபாயின் மதிப்பிற்கு என்ன நடக்கும்.....! - நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய நாணய மாற்று விகிதங்கள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 315 முதல் 320 வரையில் நிலைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. நிதியத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேந்ற வேண்டும் என்றால் பல கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்படும்.
அவ்வாறு கட்டுப்பாடுகளை தளர்த்தினால் டொலரின் தேவைகள் பாரிய அளவில் அதிகரிக்கும். அவ்வாறு அதிகரித்தால் நாட்டில் உள்ள கையிருப்புக்கள் குறைவடையும்.
இதன் போது டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும். அதற்கமைய, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய நாணய மாற்று விகிதங்கள் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.