அரசாங்கத்தினர் கூறுவதை கேட்க அவர்கள் எமது சிறிய தந்தைகளா? மைத்திரி கேள்வி
அரசாங்கத்தில் இருப்பவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டிருக்க அவர்கள் தமது சிறிய தந்தைகளா என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதாரணமாக தாய் மற்றும் தந்தை கூறுவதை கேட்டுக்கொண்டு இருந்திருக்கின்றோம். இவர்கள் கூறுவதை கேட்பதற்கு அவர்கள் என்ன எமது சிறிய தந்தைகளா. இலங்கையில் காணப்படும் அரசியல் நிலைமைகளுக்கு அமைய எவரும் தனித்து செல்ல முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி(Tissa Kuttiyarachchi) தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
சட்டியின் தேவைக்கு அப்பத்தை வழிநடத்த முடியாது எனவும் அப்பத்தின் தேவைக்கு சட்டியை வழிநடத்த முடியாது எனவும் குட்டியராச்சி குறிப்பிட்டிருந்தார்.
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த மைத்திரிபால சிறிசேன, அப்பம் சாப்பிட்டு விட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார் என்பது பிரபலமாக கூறப்பட்டு வரும் கதை என்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam