கருணா விவகாரத்தில் ரணிலின் பங்கு! - காலம் கடந்து வெளியாகியுள்ள தகவல்

Ranil Wickremesinghe Ali Zahir Moulana Vinayagamoorthy Muralitharan
By Murali Jun 18, 2021 10:16 PM GMT
Report

“17 வருடங்களுக்கு முன்னர் எனது கட்சித் தலைவர் எனது உயிரை பணயம் வைக்கும் நிலையை ஏற்படுத்தினார். எனக்கு துரோகமிழைத்தார். தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக என்னை பலிக்கடாவாக்கினார்.

அதன் பின்னர் நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டரில் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அந்த நாள் 2004 ஜூன் 22, நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து 17 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.

அவரது பெயர் ரணில் விக்கிரமசிங்க. எனக்கு துரோகமிழைத்த கட்சித் தலைவர் தொடர்ந்தும் நாட்டிற்கு துரோகமிழைக்கின்றார்.

கருணா தப்பிச்செல்வதற்கு நானே காரணம் என பிரபாகரன் அறிந்ததைத் தொடர்ந்து சீற்றமடைந்த அவர் தனது அரசியல் பிரிவினை செய்தியாளர் மாநாட்டை நடத்துமாறும் எனக்கு அதில் தொடர்பிருப்பதை அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஜூன் 20 ஆம் திகதி அது நடந்தது. மறுநாள் எனது கட்சித் தலைவரிடமிருந்து அவசர தொலைபேசி அழைப்புகள் வந்தன. தனது அலுவலகத்திற்கு என்னை வருமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மங்கள சமரவீரவும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவர்களும் செய்தியாளர் மாநாட்டினை நடத்தி தங்கள் குறுகிய அரசியலை முன்னெடுத்த வண்ணமிருந்தனர்.

எனது நடவடிக்கைக்கு எனது கட்சியே காரணம் எனத் தெரிவித்து சமாதானப் பேச்சுக்களை குழப்ப நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். கட்சித் தலைவர் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டார்.

 

நான் மிகவும் அமைதியாக உங்கள் உத்தரவின் பேரிலேயே செயற்பட்டேன் எனத் தெரிவித்தேன். நாங்கள் தற்போது அரசாங்கத்தில் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் - சமாதானப் பேச்சுவார்த்தைகள் முக்கியமில்லை என அவர் தெரிவித்தார்.

நான் அதிர்ச்சியடைந்து இவ்வாறு பதிலளித்தேன் - சேர் நீங்கள் கொழும்பில் இருந்தவாறு இதனை தெரிவிக்கலாம். நான் மக்கள் யுத்த பயத்தில் வாழும் பகுதியை பிரதிநிதித்துவம் செய்கின்றேன்.

நீங்கள் தான் இது நல்ல நடவடிக்கை எனத் தெரிவித்தீர்கள் என்றேன். நான் தற்போது கட்சியைப் பற்றி சிந்திக்க வேண்டும். நான் மிகவும் அவமானகரமான சூழலில் இருக்கின்றேன்.

நீங்கள் பதவி விலக வேண்டும் என அவர் தெரிவித்தார். நான அந்தச் சந்திப்பிலிருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினேன். எனக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைத்தன.

எனது பாதுகாப்பு ஆபத்திற்குள்ளாகியுள்ளது என அவர்கள் தெரிவித்தனர். என்னை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.” என தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US