கோட்டாபய தொடர்பில் சுமந்திரன் கூறியதில் எது உண்மை? அம்பலமாகும் ஆதாரம்
புலம்பெயர் தமிழர்களை இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabhaya Rajapaksha) பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்(M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார் என்று சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்த முடிவானது சிறந்ததொரு தீர்மானம் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுமந்திரன் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமெனில் முதலில் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து புலம்பெயர் மக்களுடனான கலந்துரையாடல் குறித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பின் மீது நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் வருகின்றது இந்த காணொளி தொகுப்பு,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
