காதலால் ஏற்பட்ட விபரீதம் - காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்
கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல பிரதேசத்தில் இளம் இராணுவ கமாண்டோ ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
தனது காதலை கேலியாக எண்ணிய காதலியின் நடத்தையால் மனம் உடைந்த 21 வயது இராணுவ கமாண்டோ ஒருவரே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக ஜாஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், ஜாஎல, ஏகல, மடம தோட்டத்தை சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். எனினும் இளைஞனின் காதலை கேலியாக எடுத்துக் கொண்டதாக தகவல் கிடைத்தமையினால் மனமுடைந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
தற்கொலை செய்துக் கொள்வதற்கு 3 மணித்தியாலங்களுக்கு முன்னர் கயிற்றை தூக்கிட்டுக்கொள்ளும் இடத்தில் கட்டி தற்கொலை செய்துக் கொள்வதற்கு தயார் என காதலிக்கு வட்ஸ்அப் ஊடாக காணொளி ஒன்றையும் அனுப்பியுள்ளார்.
இளைஞனின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam