ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளின் நிலை என்ன! (Video)
இஸ்ரேலில் இருந்து ஹமாஸினால் கடத்திச் செல்லப்பட்டு காசாவிலுள்ள நிலக்கீழ் சுரங்கங்களில் பணயக்கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள 242 பொதுமக்களின் கதி பற்றி உலகமே கவலை கொண்டுள்ளது.
இந்நிலையில், காசாவில் உள்ள நிலக்கீழ் சுரங்கங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் இஸ்ரேலியப் படைகள் எதற்காக ஈடுபட்டுவருகின்றன என்ற கேள்வி சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளது.
தரைவழியாக காசாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேலியப் படைகள், தாம் இதுவரையில் ஹமாஸின் 150 சுரங்கப்பாதைகளை அழித்து விட்டதாக தெரிவித்து, கனரக இயந்திரங்களால் சுரங்கப்பாதைகளை மண்கொண்டு மூடிவருகின்ற காட்சிகளையும் வெளியிட்டுவருகின்றது.
அப்படியானால், ஹமாஸின் நிலக் கீழ் சுரங்கங்களினுள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்த 242 பணயக் கைதிகளின் நிலை என்ன?
காசாவில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்டுவருகின்ற இதுபோன்ற நடவடிக்கைகள், சுரங்கங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற பணயக்கைதிகளை பாதிக்குமா?
இந்த விடயங்கள் பற்றி தனது பார்வையைச் செலுத்துகின்றது இன்றை ‘நிதர்சனம்’ நிகழ்ச்சி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |