ஊரடங்கை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு என்ன? - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை நீக்குவதா அல்லது மேலும் நீடிப்பதா என்பது சம்பந்தமான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக் கிழமை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன(Ramesh pathirana)தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை தெளிவாக காணமுடிகின்றது.
விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய கோவிட் தடுப்பு செயலணிக்குழு எதிர்வரும் வெள்ளிக் கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பாக மிகவும் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சர் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan