கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பதிவு செய்யப்படும் வாடகை வண்டிகளுக்கான புதிய கட்டணம் - அதிர்ச்சியில் பயணிகள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வாடகை வண்டிகளுக்கான புதிய கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை வண்டியின் புதிய கட்டணத்தை பார்க்கும் பொழுது, கொழும்பிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் செல்ல முடியும் என தெரியவந்துள்ளது.
கட்டுநாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வாடகை வண்டியின் கட்டணம் 73,000 ரூபாவை அண்மித்துள்ளது.

இலங்கையில் இருந்து அண்டை நாடான இந்தியாவிற்கு விமான டிக்கெட்டின் சராசரி விலை சுமார் 70,000 ரூபாயாகும்.
கட்டுநாயக்காவிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் கட்டணத்தை விடவும் இந்தியாவிற்கு விமானத்தில் செல்வதற்கு குறைவான பணமே தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் வரலாறு காணாத அதிகரிப்பை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam