கொழும்பில் பசியால் வாடிய பிள்ளைகள் - தந்தையின் செயலால் ஏற்பட்ட நெகிழ்ச்சி
கொழும்பு, பொரளை பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தந்தை ஒருவர் 3 கிலோ கிராம் அரிசி மற்றும் சமபோஷ பக்கட் ஒன்றிற்கு பணம் செலுத்தாமல் தப்பிச் செல்லும் போது, பாதுகாப்பு அதிகாரிகளால் பிடிபட்டுள்ளார்.
குறித்த 27 வயதான இளைஞன் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகும். அவர் கூலி வேலை செய்து அன்றாடம் குடும்பத்திற்கு உணவளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதியன்று அவருக்கு எதுவித வேலையும் கிடைக்காத நிலையில் பிள்ளைகள் பசியில் வாடியுள்ளனர்.
உணவு நெருக்கடி
ஒன்றும் செய்ய முடியாத நிலையில் பொரளை சதொச நிலையத்திற்கு சென்ற நபர் 3 கிலோ கிராம் அரிசி மற்றும் சமபோஷ பக்கட் ஒன்றை கையில் எடுத்துள்ள நிலையில் பணம் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார். எனினும் பாதுகாப்பு பிரிவினரால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பணம் செலுத்தாமல் செல்வது திருட்டு செயல் என கூறிய பாதுகாப்பு பிரிவினர் பொருட்களுடன் அந்த நபரை பொரளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்
இதன் போது பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அதிகாரி ஸ்ரீயாரத்ன என்பவரிடம் சதொச பாதுகாப்பு அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரி, குறித்த நபர் அப்பாவி என அடையாளம் கண்டுள்ளார்.
நிலைமையை அறிந்து உடனடியாக 1000 ரூபாய் பணம் கொடுத்த அதிகாரி இதனை சதொசவில் செலுத்திவிட்டு பொருட்களை கொண்டு செல்லுமாறு அதிகாரி கூறியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
