அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் நடவடிக்கை
அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
நல்லாட்சியில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் அரச ஊழியர்களுக்கு வலுப்படுத்தும் வகையில் பிரதமர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தது.
தனியார் துறையினருக்கும் சம்பளம் அதிகரிப்பு
அதேபோன்று, காலப்போக்கில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை கருத்திற் கொண்டு அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென வரவு செலவுத் திட்டங்களை தயாரிக்கும் அதிகாரிகளுக்கு, ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றவுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு இணையாக தனியார் துறையினரின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளார்.
May you like this video