ஊழியர் சேமலாப நிதியம் பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
செப்டெம்பர் முதலாம் திகதி முதல் ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய நடைமுறை
இந்த அறிவிப்பை வெளியிட்ட தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார, அடுத்த மாதம் முதல் ஊழியர் சேமலாப நிதியம் பெறுவதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் அமைச்சின் அவசர தொலைபேசி இலக்கமான 1958 க்கு அழைக்கலாம் அல்லது முன்கூட்டியே முன்பதிவு செய்ய appointment.labourdept.gov.lk என்ற மின்னஞ்சலுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் முறை
பணிகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் சிறந்த சேவை அனுபவத்தை வழங்கு முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொழிலாளர் திணைக்களத்தின் சேவைகளை அதிகரிப்பதும் இதன் நோக்கம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.





பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
