பங்களாதேஷில் தோல்வியடைந்த இந்திய உளவுப் பிரிவு
பங்காளதேஷில் ஆட்சி கவிழ்க்கப்பட்டதும், பங்காளதேஷின் பிரதமமந்திரி மயிரிழையில் உயிர்தப்பி இந்தியா வந்திருந்ததும் யாவரும் அறிந்ததே.
இந்தியாவின் அயலுறவுக்கொள்கை பங்காளதேஷில் படுதோல்லி அடைந்துவிட்டுள்ளதாகவும், இந்திய உளவுப் பிரிவான ஆய்வுப் பகுப்பாய்வுப் பிரிவு - அதாவது றோ- பங்காளதேஷில் மண்கௌவ்வியுள்ளதாகவும் ஒரு தமிழ் நாட்டு ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.
பங்காளதேஷை 15 வருடங்களாக ஆட்சிசெய்துவந்தவரும், இந்தியாவின் தீவிர ஆதரவாளருமான பிரதமர் Sheikh Hasinaவின் தோல்லி என்பது இந்தியாவின் தோல்வி என்று கவலை வெளியிட்ட அந்த ஊடகவியலாளர், பங்காளதேஷில் என்றுமில்லாதவாறு தற்பொழுது மேலோங்கிக் காணப்படுகின்ற இந்திய விரோத உணர்வுகள், 15இற்கும் அதிகமான இந்துக் கோவில்கள் அங்கு அடித்து நோறுக்கப்பட்ட சம்பவங்கள் போன்றன எல்லாமே பங்காளதேஷ் இந்தியாவின் கைகளைவிட்டு வெகு தொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கின்ற ஆபத்து என்றும் சுட்டிக் காண்பித்தார்.
பங்காளதேஷ் சுதந்திரம் அடைவதற்கு பாரிய அளவில் உதவி செய்த ஒரு நாடுதான் இந்தியா.
இந்தியாவின் உதவிகள் இல்லாவிட்டால் பங்காளதேசின் சுதந்திரம் என்பது சாத்தியமே இல்லை.
அப்படியிருக்க பக்காளதேசுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த இந்தியாவை வெறுப்பதற்கு, அன்னியமாகப் பார்ப்பதற்கு எப்படி பங்காளதேஷ் மக்களுக்கு மனது வந்தது?
இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுகின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |