பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு ஏற்படக் கூடிய நோய் அறிகுறிகள்
பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய் அறிகுறிகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் அல்லது மூன்றாவது தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு கோவிட் நோய்த் தொற்று அறிகுறிகள் ஏற்படலாம் எனவும் அது குறித்து அச்சமடையத் தேவையில்லை எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்றாம் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு மூன்று நாட்கள் வரையில் காய்ச்சல், தலைவலி மற்றும் தலைசுற்றல் உள்ளிட்ட நோய் குறிகள் தென்படலாம் என குடும்ப நல மருத்துவ நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தடுப்பூசி அல்லது பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டுமெனவும், பரசிட்டமோல் போன்ற வலி நிவாரணிகளை பயன்படுத்த முடியும் எனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். இ
வ்வாறான நோய் அறிகுறிகள் தென்பட்டால் அது தடுப்பூசியின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் செயன்முறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
