பல கோடிகள் பெறுமதியான திமிங்கல வாந்தி! கொழும்பு புறநகரில் சோதனையில் சிக்கியது
ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட திமிங்கில அம்பர் எனப்படும் திமிங்கல வாந்தியை வைத்திருந்த நபரொருவர் கொழும்பின் புறநகர் பகுதியான, நியதகல - பன்னிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை நேற்றைய தினம் (20.04.2023) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 14.3 கிலோகிராம் எடையுடைய அம்பர் மீட்கப்பட்டுள்ளது.
விலையுயர்ந்த வாசனை திரவிய தயாரிப்பு
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மீகொட பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
திமிங்கல வாந்தியானது உலகின் மிக விலையுயர்ந்த வாசனை திரவியத்தை தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

தென்னிந்தியாவில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த விஜய்யின் மதுரை TVK மாநாடு வீடியோ... குஷியில் ரசிகர்கள் Cineulagam

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
