பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! இளைஞர் பலி - யுவதி படுகாயம்
கொழும்பு-கண்டி வீதியில் வெவெல்தெனிய பகுதியில் நடந்த விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,யுவதியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்றிரவு ( 21) கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் அவருடன் பயணித்த பெண் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிள் சாரதி வரகாபொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் , அவரது நிலை மோசமாக இருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை! வாக்குமூலத்தில் கசிந்த தகவல்: முக்கிய குற்றவாளி நாட்டிலிருந்து தப்பியோட்டம்