கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் இந்தியாவிற்கு! - அமைச்சர் தினேஷ்
இந்தியாவுடனான பாரிய திட்டங்கள், முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் தொடரும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுடனான உறவு ஒரு திட்டத்துடன் மாத்திரம் முடிந்து போகாது, இரு நாடுகளுக்கும் இடையேயான சிறந்த நட்புறவின் மூலம் இந்தச் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
இதனிடையே, ஆரம்பம் முதல் அரசாங்கத்துக்கு கிழக்கு முனையம் தொடர்பாக பாரிய அர்ப்பணிப்பு காணப்பட்டது, இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை நடத்திய பேச்சுவார்தைகளின் தோல்வி இந்தப் பிரச்சினையில் பாரிய செல்வாக்குச் செலுத்தியுள்ளது எனவும் அமச்சர் தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri