மேல் மாகாண பாடசாலைகளின் மூன்றாம் தவணை பரீட்சைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
மேல் மாகாணத்திற்கான 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆகிய திகதிகளில் திட்டமிட்டபடி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தர்ஷனி இடமல்கொட இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
வினாத்தாள்கள் விநியோகம்
"மேல் மாகாணப் பாடசாலைகளில் தரம் 6 மற்றும் 7 ஆகிய வகுப்புகளுக்கு கணிதம், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கும், தரம் 8 மற்றும் 9 ஆகிய வகுப்புகளுக்கு விஞ்ஞானம் (அறிவியல்) மற்றும் அழகியல் ஆகிய பாடங்களுக்கும் தவணை பரீட்சைகளை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தரம் 6-க்கு 145,383 வினாத்தாள்களும், தரம் 7-க்கு 150,263 வினாத்தாள்களும், தரம் 8-க்கு 145,437 வினாத்தாள்களும், தரம் 9-க்கு 144,527 வினாத்தாள்களும் அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்குத் தேவையான வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு, வலய மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களுக்குப் பாதுகாப்பாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்