அரைச்சதத்தை தவறவிட்ட ஜேசன் ஹோல்டர்
T20 உலகக் கிண்ண சூப்பர் - 8 சுற்றில் இன்று(27.02.2026) மிக முக்கியமான போட்டி நடைபெற்று வருகிறது.
குறித்த போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகின்றன.
இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு
இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்ற நிலையில் இதுவரை 20ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

ரொமாரியோ ஷெப்பர்ட் அதிக பட்சமாக 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.
ஜேசன் ஹோல்டர் 49ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
தென்னாபிரிக்கா Lungi Ngidi 3ஓவர்கள பந்து வீசி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
ககிசோ ரபாடா இரு விக்கெட்டுக்களையும் கார்பின் போஷ் இரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த போட்டியின் முடிவு இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை நேரடியாக பாதிக்கவுள்ளது.
தென்னாப்பிரிக்கா வென்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு சிக்கலாக உள்ளது.
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri