புத்தாண்டு கொண்டாட்டத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்
தெற்கு பயாகல பகுதியில் நபர் ஒருவர் தடியால் தலையில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் பயாகல பகுதியை சேர்ந்த சேர்ந்த 49 வயதான நிஷாந்த பீரிஸ் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
வாக்குவாதம்
நேற்று இரவு பயாகலவின் விகாரகந்த பகுதியில் உள்ள வீட்டில் புத்தாண்டு மது விருந்து நடைபெற்றதாகவும், இதன்போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மது விருந்தை தொடர்ந்து, தெற்கு பயாகல ரயில் நிலையம் அருகே உள்ள காய்கறிச் சந்தை அருகே, உயிரிழந்தவர் மீது மற்றொருவர் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan