தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி : மனமுடைந்த இரசிகர்கள்
கொழும்பில் நேற்று(25.02.2026) நடைபெற்ற நியூசிலாந்து - இலங்கை இடையேயான போட்டியில், இலங்கை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையடுத்து, இலங்கை அணி T20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.
நடைபெற்ற போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்ததை அடுத்து இலங்கை அணி மீது கடும் அதிருப்பதியில் இரசிகர்கள் உள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியைச் சுற்றி அதிகரித்து வரும் எதிர்மறை விமர்சன சூழ்நிலை குறித்து அரசாங்கம் தலையிட வேண்டும் என அணித்தலைவர் தசுன் சானக்க கோரியிருந்தார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான நேற்று இலங்கை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நாட்டில் கிரிக்கெட்டின் போக்கை சரிசெய்ய அனைத்து மட்டங்களிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.