மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்
மட்டக்களப்பு நகர்-பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளதை அடுத்து அங்கு பெரும் அதிசயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் அமைந்துள்ள கிணற்று நீரை வழமைபோல இன்று காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.
தொல்பொருள் திணைக்கள பணிக்கு இடையூறு விளைவித்த 56 பேருக்கு எதிரான வழக்கு!நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அதிசயம்
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு கிணற்றில் வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது அது நீல நிறத்தில் கலர் மாறியுள்ளதை உறுதிபடுத்திக் கொண்டு கிணற்றை எட்டி பார்த்த போதும் அதுவும் அவ்வாறான கலரில் தண்ணீர் இருப்பதை கண்டு அதிசயமடைந்தார்.

இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri