மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்
மட்டக்களப்பு நகர் - பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (11) இடம்பெற்றுள்ளது.
இந்த வீட்டில் அமைந்துள்ள கிணற்று நீரை வழமைபோல காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.
தொல்பொருள் திணைக்கள பணிக்கு இடையூறு விளைவித்த 56 பேருக்கு எதிரான வழக்கு!நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அதிசயம்
இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு கிணற்றில் வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது அது நீல நிறத்தில் மாறியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், கிணற்றை எட்டி பார்த்த போதும் அவ்வாறான நிறத்தில் தண்ணீர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam