கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் : அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
கட்டுநாயக்க (Kattunayakke) சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தமது கடமைகளை செய்ய மறுத்தால் எல்லைக் கட்டுப்பாட்டாளர்களாக செயற்படுவதற்கு மொத்தம் 100 இலங்கை விமானப்படை அதிகாரிகள் பயிற்சி பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
"உள்ளூர் வீசா கையாளுதலை மூன்றாம் தரப்பு நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவை முடிவின்படி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வி.எஃப்.எஸ் குளோபலின் செயல்பாடுகள் மாற்றமின்றி தொடரும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
வீசா அனுமதி நடைமுறை
எனினும், எப்போதிருந்து அந்த செயற்பாடு மீண்டும் தொடங்கும் என்று அவர் தெரிவிக்கவில்லை.
கடந்த புதன்கிழமை தனது மனைவிக்கு வீசா மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த பயணியைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
எனினும் வெளிநாட்டினருக்கான வீசா அனுமதி நடைமுறை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அண்மைய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என ஜனாதிபதி செயலக சர்வதேச விவகார பணிப்பாளர் டினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கம், ஒரு டொலருக்கு குறைவான கட்டணத்திற்கு வீசா செயலாக்கத்தை கையாள்கிறது.
குடிவரவு அதிகாரிகள்
எனினும், வி.எப்.எஸ் நிறுவனம் ஒரு வீசாவிற்கு 18.50 டொலர்களை வசூலித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 17ஆம் திகதியன்று இணைய சேவைகளை வி.எஃப்.எஸ் தொடங்கிய நிலையில் மே 1ஆம் திகதியன்று கட்டுநாயக்கவில் வருகை தரும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இருப்பினும், சர்ச்சைகளை அடுத்து வி.எஃப்.எஸ் தற்காலிகமாக குறித்த சேவையில் இருந்து விலகியதால் குடிவரவு அதிகாரிகள் இப்போது மீண்டும் வீசா செயலாக்கலில் செயற்படத் தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில், நாங்கள் வி.எஃப்.எஸ் அல்லது எந்த தனியார் நிறுவனத்திற்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் செயல்பாட்டை ஒப்படைப்பதற்காக உயர்மட்டத்தினர் குடிவரவு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நன்மை தீமைகளை மதிப்பீடு செய்ய சோதனைக் காலத்தை நடத்தியிருக்க வேண்டும் என்று குடிவரவு அதிகாரிகளின் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |