ஹொரனை பகுதிக்கு மாற்றப்படும் வெலிக்கட சிறைச்சாலை!
நகர அபிவிருத்தி திட்டத்திற்காக வெலிக்கட சிறைச்சாலை வளாகத்தின் நிலத்தை நீண்ட கால குத்தகைக்கு வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம், வெலிக்கட சிறைச்சாலை வளாகம் ஹொரனை - மில்லேவ பகுதிக்கு மாற்றப்படும், அங்கு புதிய சிறை வளாகம் அமைக்கப்படவுள்ளது.
ஹொரனை - மில்லேவ பகுதியில் உள்ள 200 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியில் (42 ஏக்கரில்) வெலிக்கட சிறைச்சாலை மீண்டும் அமைக்கப்பட உள்ளது.
இது குறித்த நகர அபிவிருத்தி திட்டத்திற்கான முன்மொழிவை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரியுடன் சமர்ப்பித்துள்ளார்.
இந்த திட்டத்தின் படி, தெரிவுசெய்யப்பட்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வெலிக்கட சிறைச்சாலை வளாக நிலம் குத்தகைக்கு விடப்படும்.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan