கெஹலியவின் கோரிக்கைக்கு சிறைச்சாலை வழங்கிய சிறப்பு அனுமதி
வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்திருந்த கோரிக்கைக்கு வெலிக்கடை சிறைச்சாலை அனுமதி வழங்கியுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையின் வைத்தியர்களின் சிபாரிசுக்கு அமைய கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை
சர்ச்சையை ஏற்படுத்திய தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட அப்போதைய சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதன்படி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தற்போதைக்கு வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.
சிறைச்சாலை மருத்துவமனை விதிகளின் பிரகாரம் சந்தேக நபராகவோ, குற்றவாளியாகவோ இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தரப்படும் உணவை மாத்திரமே உட்கொள்ள முடியும். வீடுகளில் இருந்து எடுத்து வரப்படும் சமைத்த உணவுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், வீட்டில் இருந்து கொண்டு வரும் உணவுகளை பெற்றுக் கொள்ள அனுமதியை வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வெலிக்கடை சிறைச்சாலைக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த நிலையில் சிறைச்சாலை திணைக்களம் இந்த அனுமதியை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam