வெலிக்கடை சிறைபடுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல்(Photo)
மன்னார் - வெலிக்கடை சிறைபடுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO)அலுவலகத்தில் இன்று (27) காலை 11 மணியளவில் நடைபெற்றுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன் ராஜ் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
நினைவு நாள் அனுஷ்டிப்பு
இந்த நினைவேந்தல் நிகழ்வில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி ஆகியோர் உட்பட முன்னணி போராளிகளான ஜெகன், தேவன் உட்பட 53 அரசியல் கைதிகளுக்கும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ
நோகராதலிங்கம் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.