வெலிகம பிரதேச சபை பதில் தலைவருக்கும் கொலை மிரட்டல்
வெலிகம பிரதேச சபையின் பதில் தலைவரான தேனகம ராகுல தேரர், தனது சபையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் தலைவராக துடிக்கும் சமீர மதுஷான் என்பவரே கொலை மிரட்டல் விடுத்த நபர் என்றும், தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை மிரட்டல்
30.12.2025 அன்று, இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, தெனகம ராகுல தேரருக்கு இரு முறை இரண்டு கையடக்க தொலைபேசி இருந்து இரு அழைப்புகள் வந்தன.
அதில், "எங்களுடன் இருந்தாலும் நீங்கள் மாறிவிட்டீர்கள்.நாங்கள் உங்களை இப்படி இருக்க விடமாட்டோம்... கொன்றுவிடுவோம்..." என்று இரண்டு முறை மிரட்டியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமீர மதுஷானின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 1 மணி நேரம் முன்
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri